“குறைகளில் இருந்து பாடம் கற்கிறேன்” - ‘தி பாரடைஸ்’ விமர்சனம் குறித்து நானி பதிவு

“குறைகளில் இருந்து பாடம் கற்கிறேன்” - ‘தி பாரடைஸ்’ விமர்சனம் குறித்து நானி பதிவு
Updated on: 
1 min read

‘விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய குறைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறேன்’ என ‘தி பாரடைஸ்’ படம் பற்றிய விமர்சனம் குறித்து நானி கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி இரண்டாவது முறையாக நடித்திருந்த ‘தி பாரடைஸ்’ படம் செப்டம்பர்  24-ம் தேதி வெளியானது. ‘தசரா’ வெற்றிக்குப் பிறகு  மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருந்ததால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்தநிலையில், படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

அதுகுறித்து நடிகர் நானி தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் அவர் தனது பதிவில், ‘உங்களுடைய கருத்துகள் மற்றும் எதிர்வினைகளை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். உங்களின் எல்லா அன்பையும் ஏற்றுக்கொள்ளும் அதே அளவுக்கு உங்களின் நகைச்சுவையான கேலிகளையும் நான் ரசிக்கிறேன்.

மக்கள் இந்தப் படத்தை தங்களின் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்ட விதம் மனதை நெகிழச் செய்தது. அதேநேரத்தில் விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய குறைகளில் இருந்து நான் கற்றுக் கொள்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் நன்றியைத் தவிர வேறென்ன சொல்லி விடமுடியும்? 

ஒரு தனித்துவமான அனுபவத்தை உங்களுக்கு அளிப்பதற்காக அதிகமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுத்து ‘தி பாரடைஸ்’ படத்தை உருவாக்கினோம். அதை கொண்டாடுவதும் விமர்சிப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது.

அந்தப் படத்தின் மீது நீங்கள் காட்டிய உற்சாகம் மற்றும் என்மீது காட்டிய அன்புக்கும் என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்’ என நானி பதிவிட்டுள்ளார்.

‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் மோகன் பாபு, ராகவ் ஜுயல், கயாது லோஹர், சம்பூர்ணேஷ் பாபு, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோருடன் கவுரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளார். 

“குறைகளில் இருந்து பாடம் கற்கிறேன்” - ‘தி பாரடைஸ்’ விமர்சனம் குறித்து நானி பதிவு
கோயிலில் கேமரா பயன்படுத்த நிர்வாகம் எதிர்ப்பு - தனுஷ் பட பூஜையில் சலசலப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in