“எந்த நாட்​டுக்​கும் செல்ல முடியவில்லை” - ‘பாகுபலி’ தாக்கம் பற்றி பிர​பாஸ்

“எந்த நாட்​டுக்​கும் செல்ல முடியவில்லை” - ‘பாகுபலி’ தாக்கம் பற்றி பிர​பாஸ்
Updated on
1 min read

‘பாகுபலி’ திரைப்​படத் தொடரின் பிரம்​மாண்​ட​மான உருவாக்கத்தை​யும், திரைக்​குப் பின்​னால் நடந்த உழைப்​பை​யும் விவரிக்​கும் வகை​யில் ‘பாகுபலி: தி டார்ச்​பியரர்’ என்ற ஆவணத் தொடர் உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்​தில் பிரத்​யேக​மாக வெளி​யிடப்​பட்​டுள்ள இத்தொடரின் புரமோஷன் நிகழ்ச்​சி​யில் பிர​பாஸ், ராணா கலந்துகொண்​டனர். பிர​பாஸ் பேசும்​போது, “இத்​தாலி​யில் கூட மக்​கள் என்​னைப் பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பெரு​வுக்கு சென்​ற​போதும், அங்​கிருந்த குழந்​தைகள் ‘பாகுபலி’யை எவ்​வளவு விரும்​பு​கிறோம் என்று கூறினார்​கள்.

‘பாகுபலி’க்​குப் பிறகு ஏற்​பட்ட தாக்​கம் சொல்ல முடி​யாத அளவுக்கு இருந்​தது. நான் ஒரு புதிய நாட்​டில் விழித்​தெழுந்​தா​லும், அங்​கும் மக்​கள் என்னை அடை​யாளம் கண்​டு​கொள்​கிறார்​கள். அப்​போது ராஜமவுலி சாருக்கு போன் செய்​து, ‘என்னை இந்த ஜென்​மத்​தில் சுதந்​திர​மாகப் பயணம் செய்ய விட மாட்​டீர்​களா ?” என்று நகைச்​ சுவை​யாகக் கேட்​பேன்.

முன்​பெல்​லாம் ஓய்​வாக இருக்க மும்பை அல்​லது டெல்லி செல்வோம். இப்​போது உலகின் எந்த நாட்​டுக்​குச் சென்​றாலும்​ யாராவது ஒரு​வர்​ வந்​து ‘பாகுபலி’ என்​று அழைத்​து​விடு​கிறார்​கள்​” என்கிறார்.

“எந்த நாட்​டுக்​கும் செல்ல முடியவில்லை” - ‘பாகுபலி’ தாக்கம் பற்றி பிர​பாஸ்
லிங்கம்: விறுவிறு க்ரைம் த்ரில்லர் தரும் அனுபவம் எப்படி? | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in