‘சைக்கிள் கேப்​’-பில் முக்கோண காதல்

‘சைக்கிள் கேப்​’-பில் முக்கோண காதல்
Updated on
1 min read

முக்​கோண காதல் கதையை மையப்​படுத்தி உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘சைக்கிள் கேப்’. டியூப் லைட் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தில் நவாஸ் கதா​நாயக​னாக நடித்துள்ளார். ஷெர்ரி அகர்​வால், பிரபு சாஸ்தா உள்பட பலர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

எம்​.ஆர்​.​பாரதி இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு சாலமன் போஸ் டி.எஸ் ஒளிப்பதிவு செய்​துள்​ளார். சதீஷ் பத்​ம நாபன் இசை அமைத்​துள்​ளார். படம் பற்றி இயக்​குநர் எம்​.ஆர்​.​பாரதி கூறும்​போது, “உறவு​களை மையப்​படுத்​திய கதை​தான் இந்​தப் படம். இதில் கதா​பாத்​திரங்​களுக்கு இடையே​யான உணர்​வு​களுக்​கு இசை, பால​மாக இருக்​கும்​. ​ நவீன காட்​சி​யமைப்​பு​களு​டன்​ இருந்​தா​லும்​, உணர்வுப் பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும்” என்றார்.

‘சைக்கிள் கேப்​’-பில் முக்கோண காதல்
ஜார்க்கண்ட், பிஹாரில் ரூ.20,000 கோடி வரி வசூல்: அதிக வரி செலுத்தியதில் எம்.எஸ்.தோனி முதலிடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in