

யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள, ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 19-ம் தேதி வெளியாக இருந்தது. இப்படத்தை சர்வதேச அளவில் திரையிட உள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக ரிலீஸ் தேதியை, ஜூன் 4-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெறும் ‘சினிமாகான் 2026’ விழாவில் இப்படத்தின் பிரத்யேகமான 9 நிமிட முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இது அப்படத்தின் அமைப்பு, தொனி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது.