‘தி பாரடைஸ்’ வெளியீட்டு தேதி மாற்றம்!

‘தி பாரடைஸ்’ வெளியீட்டு தேதி மாற்றம்!
Updated on
1 min read

நானி நடித்து வரும் ‘தி பாரடைஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கத்தில் நானி நடித்து வரும் படம் ‘தி பாரடைஸ்’. மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால், இதன் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்துள்ளது படக்குழு. தற்போது ஆகஸ்ட் 21-ம் தேதி இப்படம் அகில இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிட்டால், முதல் வாரம் ஓணம் மற்றும் மிலாடி நபி, இரண்டாம் வாரத்தில் ரக்‌ஷா பந்தன், மூன்றாவது வாரத்தில் ஜன்மாஷ்டமி என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் இருக்கிறது. இதனால் இந்த தேதியை தேர்வு செய்துள்ளார்கள். தற்போது இப்படத்தில் நானியின் அறிமுக பாடலை படமாக்கி வருகிறது படக்குழு.

’தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சாய், எடிட்டராக நவீன் நூலி, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

‘தி பாரடைஸ்’ வெளியீட்டு தேதி மாற்றம்!
‘வித் லவ்’ வெற்றியை உணர்ந்த தருணம்: செளந்தர்யா ரஜினிகாந்த் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in