‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​தின் டீஸர், டிரெய்லருக்கு தடை

‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​தின் டீஸர், டிரெய்லருக்கு தடை
Updated on
1 min read

‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​தின் டீஸர் மற்​றும் டிரெய்லருக்கு தடை விதித்து கேரள உயர்​நீ​தி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற படத்தை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்​ளார். பிப்​.27-ல் வெளி​யாக இருக்​கும் இப்​படத்​தில் உல்கா குப்​தா, அதிதி பாடி​யா, ஐஸ்​வர்யா ஓஜா முதன்மை வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

இப்​படத்​தின் டிரெய்​லர் சமீபத்​தில் வெளி​யானது. அதில் சில பெண்​கள் சேர்ந்து இளம்​பெண் ஒரு​வரைக் கட்டாயப்படுத்தி மாட்​டிறைச்சி சாப்​பிட வைப்​பது போன்ற காட்​சிகள் இடம் பெற்​றிருந்​தன. இதற்​குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்​பியது. கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் மற்​றும் அமைச்​சர்​கள், பல்​வேறு அரசியல் கட்​சித் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரிவித்தனர்.

இந்​நிலை​யில் கேரளா​வுக்கு அவதூறு ஏற்​படுத்​தும் உருவாக்​கப்​பட்​டுள்ள இப்​படத்​துக்​குத் தடை விதிக்க கோரி கண்​ணூரைச் சேர்ந்த தேவ் நம்​பூ​திரி என்​பவர் கேரள உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் முன்​னிலை​யில் விசாரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிபதி கூறும்​போது,“பொது​வாக சினிமா காரியங்​களில் தலை​யிடு​வ​தில்​லை. ஆனால் உண்மை சம்பவங்​களின் அடிப்​படை​யில் எடுக்​கப்​பட்​டது என்று கூறி கேரளா​வின் பெயரைப் பயன்​படுத்​தும் போது அது வகுப்​பு​வாத பதற்​றத்​துக்கு வழி​வகுக்​கும். அதை வேடிக்கை பார்த்​துக் கொண்​டிருக்க முடி​யாது.

ஒன்​றிய அரசு வகுத்​துள்ள விதி​முறை​களின்​படி படம் எடுக்கப்​பட்​டுள்​ள​தா? என்​பதை பரிசோ​திப்​ப​தற்​காக படத்தைப் பார்க்​கத் தீர்​மானித்​துள்​ளேன். அனைத்து மதத்தினரும் ஒற்​றுமை​யாக வாழும் கேரளா​வின் நற்பெயருக்கு களங்​கம் ஏற்​படும் வகை​யில் இருப்​பதாக மனு​தா​ரர் அஞ்​சுவ​தால் இப்​படத்​தின் டீஸர் மற்றும் டிரெய்லருக்கு தடை விதிக்​கப்​படு​கிறது” என்​றார்.

இதற்​கிடையே இப்​படக்​குழு​வினர் கட்​டாய மதமாற்​றம் செய்​யப்​பட்​ட​தாக பல்​வேறு மாநிலங்​களி​லிருந்து 30 பெண்களை டெல்​லி​யில் நடந்த செய்​தி​யாளர்​கள் சந்திப்புக்கு அழைத்து வந்​தனர். அதில் ஒரு பெண் கூட கேரளா​விலிருந்து வரவில்​லை. இது​வும் சர்ச்​சையை ஏற்படுத்தி இருக்​கிறது.

‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​தின் டீஸர், டிரெய்லருக்கு தடை
நாட்​டில் பொது போக்​கு​வரத்​தின் தரம்: நடிகை மீரா சோப்ரா குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in