

எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படத்தில் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உட்பட சில படங்களில் நடித்த அவர், மீரா சோப்ரா என்ற தனது இயற்பெயரில் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் உபேர் நிறுவன காரை புக் செய்துவிட்டு துரதிஷ்டமான அனுபவத்தைச் சந்தித்தேன் என்று கூறியுள்ளார். அவர் கூறும்போது, “காலை 6 மணிக்கு உபேரில் ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்தேன். ஓட்டுநர் துர்நாற்றம் வீசும், தூசி நிறைந்த காரில் வந்தார்.
ஏன் இவ்வளவு துர்நாற்றம் என்று ஓட்டுநரிடம் கேட்டபோது, அவர் பேசவே முடியவில்லை. கிட்டத்தட்டத் தூங்கிக் கொண்டிருந்தார். நான் 20 நிமிடங்களுக்குள் டாக்ஸியிலிருந்து இறங்கி வேறொன்றை முன்பதிவு செய்து பயணம் செய்தேன். ஆனால் 6 மணி நேரத்துக்கு என்னிடம் கட்டணம் வசூலித்துவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொது போக்குவரத்தின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவங்கள் பயணிகள் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.