

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் திரைக் கலைஞர்களுக்காக நந்தி விருதுகளை அம்மாநில அரசு வழங்கி வந்தது. இந்நிலையில் அவ்விருதுக்கு மாற்றாக தெலங்கானா அரசு கத்தார் விருதுகளை திரைப்படத்துறைக்காக உருவாக்கியுள்ளது. இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிச.31 வரை தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்கள் இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் சிறந்த படம், நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கான விருதுகளை அரசு அறிவித்துள்ளது. ‘தண்டேல்’ படத்துக்காக, நாக சைதன்யாவுக்கு சிறந்த நடிகர் விருதும் ‘த கேர்ள் பிரண்டு’ படத்துக்காக ராஷ்மிகா மந்தனாவுக்குச் சிறந்த நடிகை விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படமாக ராஜு வெட்ஸ் ராம்பாய், சிறந்த தேசிய ஒற்றுமைப் படமாக தண்டேல், சிறந்த சுற்றுச்சூழல் படமாக இக்வா, சிறந்த பிரபல பொழுது போக்கு படமாக சங்கராந்தி கிவஸ்துனம், சிறந்த சமூகக் கருத்து படமாக கோர்ட் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
என்டிஆர் தேசிய விருது சிரஞ்சீவிக்கும் பைடி ஜெய்ராஜ் விருது கமல்ஹாசனுக்கும் பிஎன் ரெட்டி விருது சிங்கீதம் சீனிவாச ராவுக்கும் நாகிரெட்டி சக்கரபாணி விருது, தயாரிப்பாளர் அஷ்வினி தத்துக்கும் ஏஎன்ஆர் விருது நடிகை ஜெயசுதாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் மார்ச் 19-ல் வழங்கப்பட இருக்கிறது.