நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார் ஸ்வேதா பாசு

நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார் ஸ்வேதா பாசு
Updated on
1 min read

தமிழில் ‘ரா ரா’, ‘சந்​தா​மா​மா’ ஆகிய படங்​களில் நடித்​தவர் ஸ்வேதா பாசு. தெலுங்​கிலும் பல படங்​களில் நடித்​துள்ள இவர், இப்​போது பாலிவுட் வெப் தொடர்​களில் நடித்து வரு​கிறார்.

அவர் கூறும்​போது, “நான் சிறந்த கதைகளைத் தேர்ந்​தெடுத்​து​தான் நடித்து வரு​கிறேன். எனது பாத்​திரங்​களைத் தேர்ந்​தெடுப்​ப​தில் விழிப்புடன் இருக்​கிறேன். எனக்கு பத்து கதைகள் வந்​தால், 9 கதைகள் நன்றாக இல்லை என்​றால் அதை வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன். வாய்ப்பே இல்​லாமல் 6 மாதங்​கள் வீட்​டில் அமர்ந்​திருந்​தா​லும் பரவா​யில்​லை. நல்ல கதைகளுக்​காக காத்​திருப்​பேன்.

நான் எந்​தப் படத்​தை, கதா​பாத்திரத்​தைத் தேர்ந்​தெடுத்​தா​லும் அது நான் பார்க்க விரும்​பும் ஒன்​றாக இருப்​பதுமுக்​கி​யம். எனக்கு பரிசோதனை முயற்​சி​யான கதைகளும் வரு​கின்​றன.

பார்​வையாளர்​கள் அனைத்​து​வித ஜானர்படங்​களை​யும் பார்க்கிறார்​கள். அதே போல நடிகர்களுக்​கும் வித​வித​மான வகை​களில் தங்​களை வெளிப்​படுத்த இது சிறந்த நேரம். நான் ஒரு நேரத்​தில்​ ஒரு படத்​தில்​ மட்​டுமே நடிக்​கிறேன்” என்​றார்

நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார் ஸ்வேதா பாசு
புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in