ஃபேன்​டசி த்ரில்​லர் கதையில் சந்தீப் கிஷன்

ஃபேன்​டசி த்ரில்​லர் கதையில் சந்தீப் கிஷன்
Updated on
1 min read

நடிகர் சந்தீப் கிஷன் ஃபேன்​டசி த்ரில்​லர் கதை​யில் நடிக்கிறார். இப்​படத்தை தெலுங்​கில் வெற்றி பெற்ற ‘சம் பாலா’ படத்​தைத் தயாரித்த ஷைனிங் பிக்​சர்ஸ் சார்​பில் மகிதர் ரெட்​டி, ராஜசேகர் அன்​னபிமோஜு தயாரிக்​கின்​றனர். இதை உகந்​தர் முனி இயக்​கு​கிறார்.

இந்​தப் புதிய பட அறி​விப்பை முன்​னிட்​டு, படக்​குழு கான்​செப்ட் போஸ்​டரை வெளி​யிட்​டுள்​ளது. அதில், சிங்​கம் மற்றும் ஓநாய் நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதற்கு நடு​வே, போர்க்​களப் பின்​னணி​யில் ஒளிரும் பழமை​யான வாள் காட்​சி​யளிக்​கிறது. “சில போர்​கள் ஒரு​போதும் முடிவ​தில்​லை... சில மன்​னர்​கள் ஒரு​போதும் இறப்​ப​தில்​லை” என்ற டேக்​லைனும் இடம்​பெற்​றுள்​ளது. இந்த ஃபேன்​டஸி திரில்​லர் படத்​தில் புதிய பரி​மாணத்​தில் சந்​தீப் கிஷன் தோன்று கிறார். அதிக பட்​ஜெட்​டில், தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் பான்​-இந்​தியா படமாக உரு​வாகிறது. இப்​படம் பற்​றிய மற்ற தகவல்​கள் விரை​வில் வெளி​யாகும் என படக்​குழு அறி​வித்​துள்​ளது.

ஃபேன்​டசி த்ரில்​லர் கதையில் சந்தீப் கிஷன்
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in