மருத்துவராக பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா: ரசிகர்கள் வாழ்த்து!

மருத்துவராக பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா: ரசிகர்கள் வாழ்த்து!
Updated on
1 min read

தென்னிந்தியத் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, தற்போது மருத்துவ பட்டம் பெற்றுள்ளார்.

மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவர் தனது எம்பிபிஎஸ் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் சினிமாவையும் மருத்துவக் கல்வியையும் ஒரே நேரத்தில் பின்தொடர்ந்து வந்த அவர் தற்போது வெற்றிகரமாகப் பட்டத்தைப் பெற்றுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டமளிப்பு விழாவில் அங்கி அணிந்து, பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீலீலாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேடையில் பட்டம் பெற்றவுடன் அவர் தனது குடும்பத்தினரை நெகிழ்ச்சியுடன் அணைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

24 வயதான ஸ்ரீலீலா, 2020-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். திரையுலகில் பிஸியான நடிகையாக இருந்தபோதிலும், கல்வியில் கவனம் செலுத்தி இந்தச் சாதனையைப் படைத்த அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீலீலாவின் தாயார் ஸ்வர்ணலதாவும் பெங்களூருவில் ஒரு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்த ஸ்ரீலீலா, தனது தாயைப் போலவே மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற என்ற நோக்கத்தை கொண்டிருந்தார். 'புஷ்பா 2' படத்தின் 'கிஸிக்' பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இவர், தற்போது கார்த்திக் ஆர்யன் ஜோடியாகப் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.

தற்போதுபவன் கல்யாணுடன் 'உஸ்தாத் பகத் சிங்' போன்ற முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த 'பராசக்தி' திரைப்படம் வெளியானது. 

மருத்துவராக பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா: ரசிகர்கள் வாழ்த்து!
“எப்ஸ்டீன் உடனான சந்திப்புகள் தொழில்முறை சார்ந்தவை” - ராகுலுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in