பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு தொடக்கம்

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

‘ஃபவுஸி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘ஸ்பிரிட்’. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதே தெரியாமல் இருந்தது. ஏனென்றால் ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘ஃபெவுசி’ படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது.

தற்போது ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பினை பூஜையுடன் தொடங்கியிருக்கிறார்கள். இதில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். ‘அனிமல்’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் நாயகியாக திரிப்தி டிம்ரி நடிக்கவுள்ளார்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டு தொடங்கியிருக்கிறது. இதில் விவேக் ஓபராய் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தினை டி-சிரீஸ் நிறுவனம் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு தொடக்கம்
“தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது” - ஹரிஷ் கல்யாண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in