‘ஸ்லம்டாக்’ ஸ்பெஷலான திரைப்படம்: இயக்குநருக்கு விஜய் சேதுபதி வாழ்த்து

‘ஸ்லம்டாக்’ ஸ்பெஷலான திரைப்படம்: இயக்குநருக்கு விஜய் சேதுபதி வாழ்த்து
Updated on
1 min read

தெலுங்கு இயக்​குநர் புரி ஜெகன்​நாத் இயக்​கத்​தில் விஜய் சேதுபதி நடித்​துள்ள திரைப்​படம் ‘ஸ்​லம்​டாக் - 33 டெம்​பிள் ரோடு’. பான் இந்தியா திரைப்​பட​மாக உரு​வாகி​யுள்ள இதில் சம்​யுக்​தா, தபு, துனியா விஜய்​கு​மார், பிரம்​மாஜி, விடிவி கணேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்​ளார். ஆக் ஷன் கதையாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை பூரி கனெக்ட்ஸ் மற்​றும் ஜே.பி மோஷன் பிக்​சர்ஸ் நிறு​வனங்​கள் இணைந்து தயாரித்துள்ளன. இதன் படப்​பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் நடைபெற்று வரு​கின்​றன.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் இயக்​குநர் புரி ஜெகன்​நாத் திரைத்துறைக்கு வந்து 26 வருடங்​கள் ஆனதை ஒட்​டி, நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதி​வில், “சினி​மா​வில் 26 ஆண்​டு​கள் என்பது வெறும் மைல்கல் மட்​டுமல்ல; அது தைரி​யம், உறுதி மற்றும் எதற்​கும் அஞ்​சாத குரலால் உரு​வாக்​கப்​பட்ட சகாப்​தம். ‘ஸ்லம்டாக்’ திரைப்​படத்​தில் உங்​களு​டன் பணி​யாற்​றியது எனக்குக் கிடைத்த பெரிய மகிழ்ச்சி.

நடிகர்​களான நாங்​கள் எங்​களின் எல்​லைகளைத் தாண்டி சிறப்பாகச் செயல்பட வைக்​கும் இயக்​குநர்​களையே எப்​போதும் தேடு​வோம்; அதை நீங்​கள் எளி​தாகச் செய்​கிறீர்​கள். இந்​தத் திரைப்​படம் நம் அனை​வருக்​கும் தனித்​து​வ​மான, என்​றும் நினைவில் நிற்​கக்​கூடியதாக அமை​யும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

‘ஸ்லம்டாக்’ ஸ்பெஷலான திரைப்படம்: இயக்குநருக்கு விஜய் சேதுபதி வாழ்த்து
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in