நவீன தொழில்​நுட்பத்தில் வெளியாகும் ‘சங்கராபரணம்’

நவீன தொழில்​நுட்பத்தில் வெளியாகும் ‘சங்கராபரணம்’
Updated on: 
1 min read

கே.விஸ்வநாத் இயக்​கத்​தில் 1980-ம் ஆண்டு வெளியான திரைப்​படம், ‘சங்​க​ராபரணம்’. இந்​தி​யப் பாரம்​பரிய இசையின் மேன்​மையையும், ஒரு கலைஞனின் வாழ்​வையும், மனித உறவு​களின் ஆழத்​தையும் உணர்​வு​ப்​பூர்​வ​மாகப் பதிவு செய்த திரைப்​படம் இது. ஜே.வி. சோமயாஜுலு, மஞ்சு பார்​கவி, ராஜயலட்​சுமி, துளசி, சந்​திரமோகன் உள்​ளிட்ட பலர் முக்​கியக் கதாபாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். கே.வி. மகாதேவன் இசையமைப்​பில், எஸ்.பி.பாலசுப்​பிரமணி​யத்​தின் குரலில் உரு​வான இப்​படத்​தின் பாடல்​கள் காலத்​தால் அழி​யாத இசை பொக்​கிஷங்​களாக திகழ்​கின்​றன.

இசை ரசிகர்​களின் மனங்​களில் நீங்கா இடம்​பி​டித்​துள்ள, தேசிய விருதை வென்ற இப்​படம் நவீன தொழில்​நுட்​பத்​தில் இப்​போது வெளியாக இருக்​கிறது. பீப்​பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்​றும் சேனல் ஃபைவ் நிறு​வனங்​கள் இணைந்து இப்​படத்தை, தமிழ், மலை​யாள மொழிகளில், மேம்​படுத்​தப்​பட்ட 4கே அல்ட்ரா ஹெச்.டி காட்​சித் தரம் மற்​றும் 7.1 சரவுண்ட் ஒலி அமைப்​புடன் வெளி​யிடு​கின்​றனர். இதன் புதிய டிஜிட்​டல் பதிப்பை ஸ்ரீலால் தேவ​ராஜ் உரு​வாக்​கி​யுள்​ளார்.

நவீன தொழில்​நுட்பத்தில் வெளியாகும் ‘சங்கராபரணம்’
‘அப்பா குட்டி எனக்கு நெருக்கமான படம்!’ - ப்ரீத்தி அஸ்ராணி

X