

நடிகர் மோகன்லால், மீனா, ஆஷா சரத் உட்பட பலர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் உருவாகி வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது, இதன் படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே இப்படத்தின் வியாபாரம் ரூ.350 கோடிக்கு முடிந்துள்ளதாக மலையாள இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஒரு பிராந்திய மொழி திரைப்படம் ஷூட்டிங் முடிவடை யும் முன்பே இவ்வளவு வியாபாரம் ஆகியிருப்பது இதுதான் முதன்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.