பிரதமர் மோடி​யிடம் ஆசி பெற்ற ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி

பிரதமர் மோடி​யிடம் ஆசி பெற்ற ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி
Updated on
1 min read

நடிகை ராஷ்மிகா மந்​த​னா- விஜய் தேவர​கொண்டா திருமணம் நேற்றுமுன்தினம் உதய்​பூரில் பிரம்மாண்டமாக நடை​பெற்​றது. இதில் தென்​னிந்​திய திரை​யுல​கைச் சேர்ந்த பலர் கலந்து கொண்​டனர். வரவேற்பு நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் மார்ச் 4-ம் தேதி நடை​பெற இருக்​கிறது.

இந்​நிலை​யில் திரு​மணம் செய்து​ கொண்ட இரு​வரும் பிரதமர் மோடியை நேற்று சந்​தித்து ஆசி பெற்​றனர். அப்​போது திருமண வரவேற்பு நிகழ்ச்​சிக்கு வரு​மாறு அழைப்பு விடுத்​தனர். இந்​தப் புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கின்​றன.

முன்​ன​தாக, திரு​மணத்​துக்​குப் பிறகு ராஷ்மிகா தன் கணவர் விஜய் தேவர​கொண்டா குறித்து இன்​ஸ்​டா​வில் பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில், “என் கணவர் விஜய் தேவர​கொண்​டாவை உங்​களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். உண்​மை​யான அன்பு என்​றால் என்ன என்​பதை எனக்குக் கற்​றுக்​கொடுத்த மனிதர்.

நிம்​ம​தி​யாக இருப்​பது எப்​படி என்று எனக்​குக் காட்​டிய​வர். பெரிய கனவு​கள் காண்​பது தவறில்லை என்று எனக்​குச் சொல்​லி, என்​னால் அதி​கம் சாதிக்க முடி​யும் என்று தொடர்ந்து நம்​பிக்கை அளித்​தவர். என்​னுடைய நடனங்களைத் தடுக்​காதவர். நண்​பர்​களு​டன் பயணப்படுவதே உலகின் சிறந்த விஷ​யம் என்​பதை எனக்கு உணர்த்​தி​ய​வர். நம்​புங்​கள், அவரை பற்றி என்னால் ஒரு புத்​தகமே எழுத முடி​யும்.

இன்று நான் எப்​படிப்​பட்ட பெண்​ணாக இருக்க வேண்​டும் என்று கனவு கண்​டேனோ, அப்​படி​யான பெண்​ணாக மாறியிருக்​கிறேன்; அதற்​குக் காரணம் நீங்​கள்​தான். உண்மையிலேயே நான் ஆசிர்​வ​திக்​கப்​பட்​ட​வள். உங்​கள் மேல் நான் வைத்திருக்கும் உணர்​வு​களை விவரிக்க எப்போதும் வார்த்​தைகள் போதாது.

அதை உங்​களிடம் பலமுறை சொல்​லி​யிருக்கிறேன். இப்போது என் வாழ்க்கை முழு​மை​யான அர்த்​தத்​தைப் பெறுகிறது. உங்​கள் மனைவி என்று அழைக்கப்படுவதைப் பெரு​மை​யாகக் கருதுகிறேன். சிறந்த வாழ்க்​கையை வாழ்​வோம்” என்று ராஷ்மிகா மந்தனா தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் மோடி​யிடம் ஆசி பெற்ற ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி
தாய் கிழவி: விமர்சனம் - ராதிகா அசத்தும் கலகல என்டர்டெய்னர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in