எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் ராஷ்மிகா மந்தனா

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் ராஷ்மிகா மந்தனா
Updated on
1 min read

பிரபல கர்​னாடக இசைப் பாடகி எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி​யின் வாழ்க்​கைக் கதை திரைப்​பட​மாகிறது. தெலுங்​கில் ‘ஜெர்​சி’, ‘மல்லி ராவா’, ‘கிங்​டம்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய கவுதம் தின்​னூரி இயக்​கு​கிறார். அல்லு அரவிந்த், பன்​னி​வாசு, ராக்​லைன் வெங்​கடேஷ் ஆகியோர் இணைந்து இப்​படத்தை தயாரிக்​கின்​றனர்.

இதில், எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி கதா​பாத்​திரத்​தில் சாய் பல்​லவி நடிக்க இருப்​ப​தாக முதலில் கூறப்​பட்​டது. அவர் இரண்டு பாகங்​களாக உரு​வாகும் ‘ரா​மாயணம்’ படத்​தில் பிசி​யாக இருப்​ப​தால் அவரால் இந்​தப் படத்​துக்கு கால்​ஷீட் ஒதுக்க முடிய​வில்லை என்று கூறப்​படு​கிறது. அவருக்​குப் பதிலாக ருக்​மணி வசந்த் நடிக்க இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யா​யின.

இந்​நிலை​யில் எம்.எஸ்​.சுப்​புலட்​சுமி கதா​பாத்​திரத்​தில் ராஷ்மிகா மந்​தனா நடிக்க இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதுபற்​றிய அறி​விப்பு எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி​யின் பிறந்த தின​மான செப்​.16-ம் தேதி வெளியாக இருப்​ப​தாகக்​ கூறப்​படு​கிறது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் ராஷ்மிகா மந்தனா
எதிர்மறை விமர்சனம்: யூடியூபர்களுக்கு ‘டாக்ஸிக்’ படக்குழு நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in