

நடிகை ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு ‘மைசா’ படத்தின் படப்பிடிப்பில் ராஷ்மிகா கலந்து கொண்டார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு அதைத் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா. அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இந்த பான் இந்தியா படத்தில் ராஷ்மிகாவின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.