​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​
Updated on
1 min read

நடிகை ராஷ்மி​கா, தமிழ், தெலுங்​கு, இந்தி படங்​களில் நடித்து வரு​கிறார். இவர், ‘கீத கோவிந்​தம்’, ‘டியர் காம்​ரேட்’ படங்​களில் விஜய் தேவர​கொண்டா ஜோடி​யாக நடித்​தார். இந்த ஜோடி பேசப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து இரு​வரும் கடந்த சில வருடங்​களாகக் காதலித்து வரு​கின்​றனர். இரு​வரும் இதுபற்றி வெளிப்​படை​யாகத் தெரிவிக்​க​வில்லை என்​றாலும் அதுபற்​றிய செய்​தி​கள் தொடர்ந்து வெளி​யாகி வரு​கின்​றன.

சமீபத்​தில் இவர்​கள் திருமண நிச்​சய​தார்த்​தம் ஹைத​ரா​பாத்​தில் நடந்​தது. இதில் நெருங்​கிய உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​கள் மட்​டுமே கலந்து கொண்​டனர். இவர்​கள் திரு​மணம் பிப்​.26-ம் தேதி உதய்​பூரில் நடக்​கிறது.

இதி​லும் நெருங்​கிய நண்​பர்​கள், உறவினர்​கள் கலந்து கொள்​கின்​றனர். திருமண வரவேற்பு மார்ச் 4-ம் தேதி ஹைத​ரா​பாத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல் ஒன்​றில் நடக்​கிறது. இதில் திரை​யுல​கினர் கலந்​து​கொள்கின்றனர். இவர்​களின் திருமண பத்திரிகை சமீபத்​தில் சமூக வலை​தளங்​களில் வைரலானது.

இதற்​கிடையே திரு​மணத்​துக்கு முன் இரு​வரும் இணைந்து விளம்பர படம் ஒன்​றில் நடிக்​கின்​றனர். அதற்​கான படப்​பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் நடந்து வரு​கிறது.

அது என்ன விளம்​பரம் என்​பதை ரகசி​ய​மாக வைத்​துள்​ளனர். இதற்​கிடையே இரு​வரும் இணைந்து ‘ரணபாலி' என்ற பான் இந்தியா படத்​தில் நடிக்​கின்​றனர். இதை ராகுல் சாங்​கிருதயன் இயக்​குகிறார்​. இதுபற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​
உண்மைச் சம்பவப் பின்னணியில் ‘தடயம்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in