பிரேமலு 2-ம் பாகம் இப்போது இல்லை!

பிரேமலு 2-ம் பாகம் இப்போது இல்லை!
Updated on
1 min read

நஸ்லென், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்பட பலர் நடித்த மலையாள படம், ‘பிரேமலு’. இதை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் தயாரித்தனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த ரொமான்டிக் காமெடி படம், கடந்த 2024-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கிலும் வெற்றி பெற்றது. ரூ.3 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.135 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதன் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான திலீஷ் போத்தன், பிரேமலு 2 படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துவிட்டன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறியிருந்தார்.

ஆனால், பிரேமலு 2-ம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று அப்படத்தில் நாயகனாக நடித்த நஸ்லென் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “2-ம் பாகத்துக்கான திரைக்கதை எதிர்பார்த்த அளவுக்குச் சரி யாக அமையவில்லை. கதைக்களத் தில் தேவையான முழுமை கிடைக் காத்தால் இப்போது அந்தப் படம் உரு வாகாது. சில தொழில்நுட்பக் காரணங் களினாலும், கதையை அடுத்த கட்டத் துக்குச் சரியாகக் கொண்டு சேர்க்க முடி யாததால் தயாரிப்புத் தரப்பு இப்போதைக்கு இந்த யோசனையை கைவிட்டுள்ளது: என்று கூறியுள்ளார்.

பிரேமலு 2-ம் பாகம் இப்போது இல்லை!
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in