

‘ஓஜி’ இயக்குநருக்கு விலையுர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் பவன் கல்யாண்.
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் ‘ஓஜி’. டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதனை முன்னிட்டு தற்போது இயக்குநர் சுஜித்துக்கு விலையுர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் பவன் கல்யாண்.
பவன் கல்யாண் கார் பரிசளித்தது தொடர்பாக இயக்குநர் சுஜித், “இதுவே சிறந்த பரிசு. இந்த பரிசினை சொற்களால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியும், நன்றியும் அடைந்துள்ளேன். எனது எனது அன்புக்குரிய ஓஜி கல்யாண் சாரிடம் இருந்து கிடைத்த ஊக்கமும், அன்பும் தான் எனக்கு எல்லாமே. சிறுவயது ரசிகனாக இருந்ததிலிருந்து இந்தச் சிறப்பான தருணம் வரை என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இம்ரான் ஹாஸ்மி, பிரியங்கா மோகன், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் பவன் கல்யாண் உடன் நடித்திருந்த படம் ‘ஓஜி’. இதன் காட்சியமைப்புகள், இசை, ஒளிப்பதிவு என அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால், இப்படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.