‘ஓ சுகு​மாரி’ புதிய பாணி கதை

‘ஓ சுகு​மாரி’ புதிய பாணி கதை
Updated on
1 min read

ஐஸ்​வர்யா ராஜேஷ் முதன்மை பாத்​திரத்​தில் நடித்​துள்ள திரைப்​படம்​ ‘ஓ...! சுகு​மாரி’. இதில் வீர் கதா​நாயக​னாக நடிக்​கிறார். இதில் ஜான்​சி, விஷ்ணு ஓ லட்​டு, ஆமணி, முரளிதர், ஆனந்த் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

அறி​முக இயக்​குநர் பரத் தர்​ஷன் இயக்​கும் இப்​படத்​தைக் கங்கா என்​டர்​டெ​யின்​மென்ட் நிறு​வனம் சார்​பில் மஹேஸ்​வர் ரெட்டி மூலி தயாரிக்​கிறார்.

இப்​படம் தெலுங்​கு, தமிழ், மலை​யாளம், கன்​னட மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. நாயகியைத் தொட்​டால் ஷாக் அடிக்​கும் என்​பது போன்ற கதையைக் கொண்ட இப்​படத்​தின் டீஸர் வெளியாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

இப்​படம் பற்றி ஐஸ்​வர்யா ராஜேஷ் கூறும்​போது, “இத்​திரைப்​படம் தென்​னிந்​திய ரசிகர்​கள் இது​வரை கண்​டி​ராத புதிய பாணியிலான கதையைக் கொண்​டது. நிச்​சய​மாக சிறந்த பொழுது ​போக்​குத் திரைப்​பட​மாக இருக்​கும்” என்​றார்.

‘ஓ சுகு​மாரி’ புதிய பாணி கதை
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in