‘என் முடிவை மற்றவர்கள் எடுக்கக் கூடாது’ - மியா ஜார்ஜ் ஆதங்கம்

‘என் முடிவை மற்றவர்கள் எடுக்கக் கூடாது’ - மியா ஜார்ஜ் ஆதங்கம்
Updated on: 
1 min read

தமி​ழில் ‘அமரகா​வியம்’, ‘இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒரு நாள் கூத்து’ உள்​பட சில படங்​களில் நடித்​திருப்​பவர், மலை​யாள நடிகை மியா ஜார்ஜ். நடிகைகளுக்​குத் திரு​மண​மாகி விட்​டால் நடிக்க வர​மாட்​டார்​கள் என்ற எண்​ணம் பொது​வாக இருப்​ப​தாகக் கவலை தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, “ஒரு நடிகைக்​குத் திரு​மண​மாகி விட்​டால் அவர் மீண்​டும் நடிக்க வர​மாட்​டார் என்று பொது​வான எண்​ணம் இருக்​கிறது. ‘மீண்​டும் நடிப்​பீர்​களா?’ என்று கேட்​கக் கூட மாட்​டார்​கள். அது​வும் குழந்​தைகள் பிறந்​து​விட்​டால் கண்​டிப்​பாக நடிக்க வரவே மாட்​டார்​கள் என முடிவு செய்​து​விடுவார்​கள். எங்​கள் முடிவை நீங்​கள் எப்​படி எடுக்​கிறீர்​கள் என்று கேட்கத் தோன்​றும். ஆனால், முடிய​வில்லை.

நான் நடிக்க வேண்​டுமா, வேண்​டாமா என்​பதை முடிவு செய்​வது மற்​றவர்​களின் வேலையல்ல. மகப்​பேறு விடுப்​புக்​குப் பிறகு ஓர் ஆசி​ரியை பணிக்​குத் திரும்​பும்​போது அதில் யாருக்​கும் பிரச்​சினை இல்லை, கேள்​வியும் கேட்​ப​தில்லை. இது எல்​லாத் துறைகளி​லும் நடக்​கும் ஒன்​றுதான்.

ஆனால் நடிகை என்று வரும்​போது, திரு​மண​மாகி குழந்தை பிறந்​தால் மீண்​டும் நடிக்க வர​மாட்​டார்​கள் என்ற பொது​வான எண்​ணம் வந்​து​விடு​கிறது. இந்​தத் துறை​யில் மட்​டும்​தான், எங்​களுக்​கான முடிவு​களை மற்​றவர்​கள் எடுக்​கிறார்​கள்” என்​றார்.

‘என் முடிவை மற்றவர்கள் எடுக்கக் கூடாது’ - மியா ஜார்ஜ் ஆதங்கம்
சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையில் ‘தாயன்’

X