

நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். ஹைதராபாத்தில் நடந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் நேரடியாக அறிவிக்கவில்லை. இவர்கள் திருமணம் அடுத்த மாதம் 22-ம் தேதி உதய்பூரில் நடைபெற இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தங்கள் காதல் பற்றியோ, திருமணம் பற்றியோ இருவரும் அமைதி காத்து வருகின்றனர்.
நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், “கடந்த 4 ஆண்டுகளாக இந்த செய்தி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதை எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவேன்” என்று தனது காதல் மற்றும் திருமணம் பற்றிக் கூறியிருந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணத்துக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய இருக்கின்றனர். இதற்கான ஆர்டர் ஒரு மாதத்துக்கு முன்பே செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.