

நடிகர் நாகார்ஜுனா
நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தை ரா.கார்த்திக் இயக்குகிறார். இவர் ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியவர். இந்தப் படத்தை நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
இதில் தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இருவரும் 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். சுஷ்மிதா பட், விஜயேந்திரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவி பிரசாத் இசை அமைக்கிறார்.
நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்துக்கு ‘கிங் 100’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாகார்ஜுனா மோசடி தொழிலதிபராக நடிக்கிறார். டிச.24-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.