‘நாகபந்​தம்’ சாதாரண திரைப்படம் அல்​ல: நடிகை நபா நடேஷ்

‘நாகபந்​தம்’ சாதாரண திரைப்படம் அல்​ல: நடிகை நபா நடேஷ்
Updated on
1 min read

விராட் கர்​ணா, நபா நடேஷ், ஐஸ்​வர்யா மேனன், மகேஷ் மஞ்ச்​ரேகர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்​படம், ‘நாகபந்​தம்’.

அபிஷேக் நாமா எழுதி இயக்​கி​யுள்ள இப்​படம், ஜூலை 3ம் தேதி தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், மலை​யாள மொழிகளில் வெளியாகிறது. இந்​தப் படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்டனர்.

நடிகை நபா நடேஷ் பேசும்​போது, "இது சாதா​ரண​மான திரைப்​படம் அல்ல. நமது வரலாறு, மர்​மம், சாகசம், ஆக் ஷன், த்ரில்​லர் மற்​றும் உணர்​வுப்​பூர்​வ​மான தருணங்​கள் அனைத்​தும் இணைந்த பிரம்​மாண்​ட​மான திரை அனுபவம். இதில் பணி​யாற்​றியது சிறப்பான அனுபவ​மாக இருந்​தது. படத்​தின் கதை​யும், உருவாக்கப்​பட்ட உலக​மும் பார்​வை​யாளர்​களுக்கு புது​மை​யான அனுபவத்தை வழங்​கும். டிரெய்​லருக்கு கிடைத்​துள்ள வரவேற்பு மகிழ்ச்​சியை தந்​திருக்​கிறது” என்​றார்.

நாயகன் விராட் கர்ணா பேசும்​போது, “இந்​தப் படம் இந்​திய கலாச்சா​ரம், பாரம்​பரி​யம், தைரி​யம், கோயில்​களின் மரபு, நமது தொன்​மை​யான நாகரீகத்​தின் பல அம்​சங்​களை பேசுகிறது. நம் நாட்​டின் வரலாறு மற்​றும் ஆன்​மிக மரபு​களை புதிய தலை​முறைக்கு கொண்டு செல்​லும் முயற்​சி​யாக இந்​தப் படம் இருக்கும்” என்​றார்.

‘நாகபந்​தம்’ சாதாரண திரைப்படம் அல்​ல: நடிகை நபா நடேஷ்
‘அம்​மா’​வில் இருந்து விலகியது ஏன்? - ஸ்வேதா மேனன் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in