

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’.
இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் யாஷின் மாஸ்டர் மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மார்ச் 19-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாகப் படத்தின் ரிலீஸ் தேதியை, ஜூன் 4ம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாகத் தகவல் வெளியானது. இதை படக்குழு தரப்பில் மறுத்துள்ளனர். இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.