காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!
Updated on
1 min read

காதல் குறித்து பரவிய வதந்திகளுக்கு மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சில தினங்களாகவே மிருணாள் தாகூர் குறித்த காதல் வதந்திகள் சமூக வலைதளத்தில் உலவி வருகின்றன. கடந்த வாரம் தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின. அதற்கு “இலவச விளம்பரம்” என்று கிண்டலாக பதிலளித்திருந்தார் மிருணாள் தாகூர்.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை காதலித்து வருகிறார் மிருணாள் தாகூர் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “அவர்கள் பேசுவது எனக்கு சிரிப்புதான் வருகிறது. வதந்திகள் எப்போதுமே இலவச விளம்பரம்தான். அது எனக்கு பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.

தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள் தாகூர். முக்கியமாக, அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிருணாள் தாகூர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!
இந்தியில் ரூ.50 கோடி வசூலை கடந்தது தனுஷின் ‘தேரே இஷ்க் மே’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in