

இந்தியி மட்டும் ரூ.50 கோடி வசூல் கடந்திருப்பதால் ‘தேரே இஷ்க் மே’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தேரே இஷ்க் மே’. இந்தியில் பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்டாலும், இதர மொழிகளில் விளம்பரப்படுத்தப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படம் வெளியானது.
இந்தியில் 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலைக் கடந்திருக்கிறது ‘தேரே இஷ்க் மே’. மேலும், உலகளாவிய வசூலில் ரூ.70 கோடியைத் தொட்டிருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால், சமீபத்திய இந்தி திரையுலக நடிகர்கள் சிலரின் படங்கள் கூட இந்தளவுக்கு வசூல் செய்யாததே இதற்கு காரணம் என்கிறார்கள். விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
’தேரே இஷ்க் மே’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூலில் எந்தவொரு குறையும் இல்லை. இளைஞர்கள் மத்தியில் இப்படத்தின் இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.4 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்திருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் படக்குழுவினர் கவலைப்படாமல், இந்தி வசூலை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.