மோகன்லால் புதிய படத்தின் தலைப்பு ‘ஆப்ரேஷன் கங்கா’

மோகன்லால் புதிய படத்தின் தலைப்பு ‘ஆப்ரேஷன் கங்கா’
Updated on
1 min read

விஷ்ணு மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘ஆப்ரேஷன் கங்கா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படம் ‘L367’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்தது.

ஸ்ரீகோகுலம் பிலிம்ஸின் கீழ் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்குகிறார். இந்தப் படத்தில் மோகன்லாலுடன் அர்ஜுன் ராம்பால், பாக்யஸ்ரீ போர்ஸ், பார்த்திபன் மற்றும் ஆதில் ஹுஸைன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் போஸ்டரையும், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள படக்குழு, ‘பிரசண்டிங் ஆப்ரேஷன் கங்கா - ஒரு தேசத்தின் வாக்குறுதி’ என்று தெரிவித்துள்ளது.

இந்தப் படம் வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மீட்பு பணிகளையும், அதன் இறுதிக்கட்ட நடவடிக்கையும் பற்றி கூறும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணியை ‘புஷ்பா’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மிரோஸ்லாவ் குபா பெரேசக் (Miroslaw Kuba Brozek) மேற்கொள்கிறார். படத்துக்கு ஷாஸ்வத் சச்தேவ் இசையமைக்கிறார்.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியபோது அந்நாடுகளில் சிக்கியிருந்த மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை தாய்நாடு அழைத்து வர இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு ‘ஆப்ரேஷன் கங்கா’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது குறிப்படத்தக்கது.

உண்மையில் நடந்த ஒரு மீட்பு நடவடிக்கை பற்றிய கதையில் முக்கியக் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக சொல்லப்படும் இந்தப் படம் வரவிருக்கும் அவரது படங்களில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மோகன்லாலின் நடிப்பில் கடைசியாக மே 21-ம் தேதி ‘த்ரிஷ்யம் 3’ வெளியானது.

மோகன்லால் புதிய படத்தின் தலைப்பு ‘ஆப்ரேஷன் கங்கா’
“கவனத்தை ஈர்ப்​ப​தற்​காக மட்டுமே நடிக்க மாட்​டேன்” - கயாடு லோஹர் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in