மீண்டும் இணைகிறது ‘துடரும்’ படக்குழு!

மீண்டும் இணைகிறது ‘துடரும்’ படக்குழு!
Updated on
1 min read

மோகன்லாலின் 365-வது படத்தை ‘துடரும்’ இயக்குநர் தருண் மூர்த்தி இயக்குவார் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

‘த்ரிஷ்யம் 3’ படத்தைத் தொடர்ந்து, மோகன்லால் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை அஸ்டின் டான் தாமஸ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனை ஆஷிக் உமான் தயாரித்து வந்தார். தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆஷிக் உமான் மற்றும் அஸ்டின் டான் தாமஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை யார் இயக்குவார் என்று கேள்வி எழுந்து வந்தது. தற்போது இப்படத்தை ‘துடரும்’ இயக்கிய தருண்மூர்த்தி இயக்குவார் என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் அந்த இயக்குநரையே, மோகன்லாலின் 365-வது படத்தையும் இயக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

மீண்டும் இணைகிறது ‘துடரும்’ படக்குழு!
‘ஸ்பிரிட்’ ஓடிடி உரிமையை பெரும் விலைக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in