

மகள் விஸ்மயாவை ஏற்றுக்கொண்டதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் மோகன்லால், ‘ஒரு தந்தையின் மனம் இதை விட வேறு எதைக் கேட்டு விட முடியும்’ என்றும் கூறியுள்ளார்.
‘2018’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி இயக்கத்தில் மோகன்லால் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகி இருக்கும் படம் ‘துடக்கம்’. இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பரவலாக கவனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், மகளின் சினிமா பயணம் குறித்து மோகன்லால் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர், ‘ஒரு தந்தையின் மனம் இதை விட வேறு எதைக் கேட்டு விட முடியும். ‘துடக்கம்’ படத்தின் மூலமாக விஸ்மயா தொடங்கி இருக்கும் பயணத்தையும், அவர் மீது நீங்கள் காட்டும் அன்பை பார்ப்பதுநான் எப்போதும் பெற்றிருக்கும் பெரும் ஆசிர்வாதமாகும்.
சிறுவனாக இருக்கும் போதே எனக்கு அறிமுகமான, என் அன்புக்கு பாத்திரமான ஆஷிஷ் ஜோ ஆண்டனி, விஸ்மயாவுடன் இணைந்து இந்த அழகான பயணத்தை மேற்கொண்டிருப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் இருவரையும் பெறும் அன்புடன் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி’ என்று மோகன்லால் தெரிவித்துள்ளார்.