ஜார்ஜ் குட்டி குடும்​பத்தை ஏற்​றுக்​கொண்​டதற்கு நன்றி: நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி

ஜார்ஜ் குட்டி குடும்​பத்தை ஏற்​றுக்​கொண்​டதற்கு நன்றி: நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி
Updated on
1 min read

மோகன்​லால் நடித்த ‘த்​ரிஷ்​யம்’ வரிசை படங்​கள் வெற்றி பெற்​றதை அடுத்து அதன் 3-ம் பாகம் உரு​வாகி​யுள்​ளது. இதில் மோகன்​லாலுடன் மீனா, அன்​சிபா ஹசன், எஸ்​தர் அனில், ஆஷா சரத் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். ஜீத்து ஜோசப் இயக்​கிய இப்​படத்தை ஆசீர்​வாத் சினி​மாஸ் சார்​பில் ஆண்​டனி பெரும்​பாவூர் தயாரித்​துள்​ளார். இப்​படம் கடந்த 21-ம் தேதி வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வரு​கிறது.

நடிகர் மோகன்​லால், ரசிகர்​களு​டன் இணைந்து முதல் நாள் முதல் காட்​சி​யைப் பார்த்​தார். படத்​துக்​குக் கிடைத்த ரசிகர்​களின் வரவேற்​பைக் கண்டு மோகன்​லால் நெகிழ்ந்து உணர்ச்சி வசப்​பட்ட வீடியோ இணை​யத்​தில் வெளி​யானது. இதையடுத்து இப்​படத்​தில் தனது கதா​பாத்​திர​மான ஜார்ஜ் குட்​டியை ஏற்​றுக்​கொண்​டதற்கு ரசிகர்​களுக்கு மோகன்​லால் நன்றி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர், “த்​ரிஷ்​யம் 3 திரைப்​படம் அர்ப்​பணிப்​புட​னும், அன்​புட​னும், நன்​றி​யுணர்​வுட​னும் உரு​வாக்​கப்​பட்​டது. அதற்​குப் பதிலாக நீங்​கள் பொழி​யும் பேரன்​பைக் கண்டு நெகிழ்​கிறேன். உங்​களின் விமர்​சனங்​களும், நெஞ்​சார்ந்த வார்த்​தைகளும், நீங்​கள் பகிர்ந்த உணர்​வு​களும் எந்த வசூலை​யும் விட எனக்கு மிக உயர்ந்​தவை. படத்​தைக் கண்டு ரசித்​ததற்​கும்​, அதன்​ ஒவ்​வொரு தருணத்​தோடும்​ உங்​களை இணைத்​துக்​ கொண்​டதற்​கும்​, ஜார்​ஜ்குட்​டியை​யும்​ அவரது குடும்​பத்​தை​யும் உங்களுடையவர்களாகவே ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் குட்டி குடும்​பத்தை ஏற்​றுக்​கொண்​டதற்கு நன்றி: நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி
ஒட்டுமொத்தத் திரையுலக​மும் முடங்கும்: திரைப்பட கூட்டமைப்பு எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in