ரிஷப் ஷெட்​டியுடன் இணையும் மஞ்சும்​மள் பாய்ஸ் சிதம்​பரம்

ரிஷப் ஷெட்​டியுடன் இணையும் மஞ்சும்​மள் பாய்ஸ் சிதம்​பரம்
Updated on: 
1 min read

சவுபின் சாஹிர், நாத் பாஸி உள்பட பலர் நடித்து வெளி​யான மலை​யாள படம், ‘மஞ்​சும்​மள் பாய்​ஸ்’. கொடைக்​கானல் குணா குகை​யில் நடந்த உண்​மைச் சம்​பவத்தை அடிப்​படை​யாக வைத்து சிதம்​பரம் இயக்​கிய இந்​தப் படம், மலை​யாளம் தவிர, தமிழ், தெலுங்​கிலும் சூப்​பர் ஹிட்​டானது.

இந்​நிலை​யில் இதன் இயக்​குநர் சிதம்​பர​மும் பிரபல பான் - இந்​தியா நட்​சத்​திரம் ரிஷப் ஷெட்​டி​யும் 2 புதிய படங்​களில் இணை​கின்​றனர்.

முதல் படம் விளை​யாட்​டுப் பின்​னணி​யில் உரு​வாக இருக்​கிறது. கன்​னடத்​தில் உரு​வாகும் இப்​படம் மற்ற தென்​னிந்​திய மொழிகளில் டப் செய்​யப்​பட்டு வெளி​யாக இருக்​கிறது. இப்​படத்​தின் முன் தயாரிப்பு பணி​கள் ஏற்​கெனவே தொடங்​கி​விட்​டன. படப்​பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்​கிறது. இதை ஷிபு தமீன்ஸ் தயாரிக்​கிறார்.

இப்படம் பற்​றிய மற்ற தகவல்கள் பின்​னர் வெளி​யிடப்​படும். நடிகர் ரிஷப் ஷெட்டி தற்​போது ‘ஜெய் ஹனு​மான்’ படத்​தில் நடித்து வரு​கிறார். அதை முடித்​து​விட்டு இதன் படப்​பிடிப்​பில் கலந்து கொள்​வார் என்​று தெரி​கிறது.

ரிஷப் ஷெட்​டியுடன் இணையும் மஞ்சும்​மள் பாய்ஸ் சிதம்​பரம்
புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in