

மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள படம், ‘பேட்ரியாட்’. இருவரும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் இது.
‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களுக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, குஞ்சாக்கோ போபன், கிரேஸ் ஆண்டனி, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 140 நாள்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது. நடிகர் மம்மூட்டியின் முந்தைய படமான ‘களம் காவல்’ வரவேற்பைப் பெற்றுள்ளதால் இப்படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.