கர்ணனின் கதையை பிரம்மாண்டமாக சொல்லும் ‘மஹாவீர் கர்ணா’

கர்ணனின் கதையை பிரம்மாண்டமாக சொல்லும் ‘மஹாவீர் கர்ணா’
Updated on
1 min read

மகாபாரத கதாபாத்திரமான கர்ணனின் கதையை புதிய களத்தில் சொல்லும் படமாக உருவாகி வருகிறது, ‘மஹாவீர் கர்ணா’. இதை ரமேஷ் வர்மா இயக்குகிறார்.

பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக் ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை டீஸர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படம் டிச. 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

“இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, பிரம்மாண்டமான ‘லைவ்-ஆக் ஷன்’ மற்றும் ‘ஹைப்ரிட்’ தொழில்நுட்பக் கலவையில் உருவாகும் காவியத் திரைப்படம் இது.

கர்ணனின் கதை வெறும் புகழைத் தேடும் ஒரு வீரனின் கதை மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்கை அனைத்துக்கும் மேலாகக் கருதிய ஒரு மனிதனின் கதை. குந்திக்குப் பிறந்தாலும் அரச குடும்ப அங்கீகாரத்தில் இருந்து விலகி வளர்ந்த கர்ணன், நிராகரிப்பு, அடையாளம் மற்றும் விதி ஆகியவற்றுடன் தனது வாழ்நாள் முழுவதும் போராடுகிறார்.

இருந்தாலும், தான் தேர்ந்தெடுத்த மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீதும் அவர் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாததாக இருந்தது. கர்ணனின் உறுதியும் கொடைத்தன்மையும் அவரது குணத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. இதுதான் இப்படத்தின் உணர்வுப்பூர்வமான அடித்தளமாக அமைந்துள்ளது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ராம்ஜி டாட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஞானி இசையமைத்துள்ளார். ஸ்ரீமணி வசனம் எழுதியுள்ளார்.

கர்ணனின் கதையை பிரம்மாண்டமாக சொல்லும் ‘மஹாவீர் கர்ணா’
All We Imagine As Light: இளைப்பாறுதல் தேடும் மனிதிகள் பார்வதி, பிரபா, அனு | திரை தேவதைகள் 32

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in