புராண காவிய​மாக உரு​வாகும் ‘மஹா​காளி’க்கு 125 நாள் படப்பிடிப்பு

நடிகை பூமி ஷெட்டி

நடிகை பூமி ஷெட்டி

Updated on
1 min read

பிர​சாந்த் வர்மா இயக்​கத்​தில், தேஜா சஜ்ஜா நாயக​னாக நடித்த ‘ஹனு- மேன்’ திரைப்​படம் வரவேற்​பைப் பெற்​றது.

இதில், வினய் ராய், வரலட்​சுமி, அமிர்தா ஐயர் என பலர் நடித்திருக்கிறார்​கள். ஹனு-மேன் சினி​மாட்​டிக் யுனிவர்​ஸின் அடுத்த படமாக ‘மஹா​காளி’ உரு​வாகி வரு​கிறது. ஆர்​கேடி ஸ்டூடியோஸ் சார்​பில் ஆர்கே துக்​கல் மற்​றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்​கின்​றனர். ஸ்மரன் சாய் இசை அமைக்​கிறார். சுரேஷ் ரகது ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

புராண காவிய​மாக உரு​வாகி வரும் இப்​படத்​தில் பூமி ஷெட்டி, டைட்​டில் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். அக் ஷய் கன்​னா, ரோஹித் சராஃப் என பலர் நடித்​துள்ள இப்​படத்​தின் படப்​பிடிப்பு நிறைவடைந்​துள்​ளது. 125 நாட்​கள் படப்​பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்​றும் பிரம்​மாண்​ட​மான திரையரங்க அனுபவத்தை வழங்​கும் வகை​யில், ஐமேக்​ஸில் இப்​படம் வெளியாக இருக்​கிறது என்​றும் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p><em>நடிகை பூமி ஷெட்டி</em></p></div>
ரூ.1.27 லட்சம் கோடியில் செமிகண்டக்டர் உற்பத்தி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in