சைபர் கிரைமில் லாவண்யா திரிபாதி புகார்

சைபர் கிரைமில் லாவண்யா திரிபாதி புகார்
Updated on
1 min read

தமிழில், சசிகுமாரின், ‘பிரம்மன்’, சி.வி.குமாரின் ‘மாயவன்’ படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கிலும் நடித்து வந்த அவர், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து, தன்னைப் பற்றியும் தனது குடும்பம் பற்றியும் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.

தனது புகைப்படங்களை மார்பிங் செய்து பொய்யான பிரச்சாரம் செய்வதாகவும் தவறான குற்றச்சாட்டுகளையும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் பகிர்ந்து வருவதாகவும் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வெளியிடும் பதிவால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாகவும் அப்புகாரில் லாவண்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரித்து வருகின்றனர்.

சைபர் கிரைமில் லாவண்யா திரிபாதி புகார்
இறுதிக் கட்டத்தில் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in