இறுதிக் கட்டத்தில் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
இறுதிக் கட்டத்தில் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
Updated on
1 min read

​தி​முக தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை இறு​தி​க் கட்​டத்தை எட்​டி​யுள்ள நிலை​யில் கம்​யூனிஸ்ட், கொமதேக உள்​ளிட்ட கூட்​டணி கட்​சிகளு​டன் இன்று ஒப்​பந்​தம் கையெழுத்​தாக உள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

ஆளும் கட்​சி​யான திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ், மதி​முக, விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், தேமு​திக, மக்​கள் நீதி மய்​யம் உள்​ளிட்ட 26 கட்​சிகள் அங்​கம் வகிக்​கின்​றன. திமுக சார்​பில் கூட்​டணி கட்​சிகளுக்​கான தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை கடந்த பிப்​ர​வரி 22-ம் தேதி தொடங்கி நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் காங்​கிரசுக்கு 28, முஸ்​லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்​கள் ஓதுக்​கப்​பட்​டுள்​ளன. இதர கட்​சிகளு​டன் திமுக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில், திமுக-​மார்க்​சிஸ்ட் இடையே​யான 2-ம்​கட்ட தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை சென்னை அறி​வால​யத்​தில் நேற்று நடை​பெற்​றது. திமுக​வில் பொருளாளர் டி.ஆர்​.​பாலு தலை​மையி​லான குழு​வும், மார்க்​சிஸ்ட் கட்​சி​யில் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் உள்​ளிட்​டோரும் கலந்து கொண்​டனர்.

அப்​போது, மார்க்​சிஸ்ட் 8 தொகு​தி​களை கேட்​ட​தாக​வும், அதற்கு 6 தொகு​தி​கள் வரை ஒதுக்க திமுக ஒப்பு கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. இதில் உடன்​பாடு எட்​டப்​ப​டாத​தால் பேச்​சு​வார்த்தை மீண்​டும் இன்று (மார்ச் 11) தொடர்​கிறது.

இதுதொடர்​பாக மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் நிருபர்​களிடம் கூறும்​போது, “இரண்​டாம் கட்ட பேச்​சு​வார்த்​தை​யில் திமுக கூறிய எண்​ணிக்​கை​யில் உடன்​பாடு இல்​லை.

கடந்த முறை கொடுக்​கப்​பட்ட எண்​ணிக்​கை​யை​விட கூடு​தலாக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என கோரிக்கை வைத்​துள்​ளோம். திமுக தலை​வ​ருடன் கலந்​தாலோ​சித்த பின்​னர் இன்று பேச்​சு​வார்த்​தைக்கு மீண்​டும் அழைப்​ப​தாக தெரி​வித்​துள்​ளனர்​”என்​றார்.

இந்​திய கம்​யூனிஸ்ட்: இதற்​கிடையே இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலை​மை​யில், கட்​சி​யின் நிர்​வாகக் குழு கூட்​டம் தி.நகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக​வுட​னான தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்​தை​யில் என்ன முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது, மக்​களிடம் நிதி வசூல் பெறு​வது உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்​கப்​பட்​டன.

கடந்த தேர்​தலில் போட்​டி​யிட்ட 6 இடங்​களில் ஒன்றை குறைத்து தரு​வ​தாக திமுக தெரி​வித்த நிலை​யில், அதற்கு மறுப்பு தெரி​வித்து இந்​திய கம்​யூ. 7 இடங்​களை கேட்​டுள்​ளது. அதன்​படி 2 கம்​யூனிஸ்ட் கட்​சிகளுக்​கும் கடந்த தேர்​தலை போல் தலா 6 இடங்​களுக்கு பேசி முடிக்​கப்​படலாம் என்று கூறப்படுகிறது.

இறுதிக் கட்டத்தில் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
அங்கீகாரம் பெற முயற்சிக்கும் மதிமுக: ஆசைக்கு அணைபோடும் திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in