

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியும் கீர்த்தி சுரேஷும் தெலுங்கில் இணைந்து நடிக்கின்றனர்.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, வெங்கடேஷ் நடித்த சங்கராந்திக்கு வஸ்துனம், சிரஞ்சீவி நடித்த மன சங்கரவர பிரசாத் காரு உள்பட சில படங்களை இயக்கியவர் அனில் ரவிபுடி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் வெங்கடேஷ், கல்யாண் ராம் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி நாயகிகளாக நடிக்கின்றனர். சீனியர் நடிகரான வெங்கடேஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். கமர்ஷியல் மசாலா படமான இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.