நேரடி தெலுங்கு படத்​தில் கார்த்தி?

நேரடி தெலுங்கு படத்​தில் கார்த்தி?
Updated on
1 min read

நடிகர் கார்த்தி ‘சர்​தார் 2’ படத்​தில் நடித்து முடித்​துள்​ளார். அடுத்து, தமிழ் இயக்​கும் ‘மார்​ஷல்’ படத்​தில் நடித்து வரும் அவர், நேரடி தெலுங்கு படத்​தில் நடிக்க இருப்​ப​தாக சில வருடங்​களாகச் செய்​தி​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

ஏற்​கெனவே தமிழ், தெலுங்​கில் உரு​வான ‘தோழா’ படத்தில் நடித்​துள்ள அவருக்​குத் தெலுங்​கிலும் மார்க்​கெட் இருக்​கிறது. இந்​நிலை​யில் ‘ஹிட் 4’ என்ற படத்தை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்​கத்​தில் நேரடி தெலுங்கு படத்​தில் நடிப்​ப​தாகக் கூறப்​பட்​டது.

இப்​போது, ‘மேட்’ என்ற தெலுங்கு படத்தை இயக்​கிய கல்யாண் ஷங்​கர் இயக்​கும் படத்​தில் அவர் நடிக்க இருப்பதாக​வும் இப்​படத்தை சித்​தாரா என்டர்டெயின்மென்ட் நிறு​வனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்​படு​கிறது.

நடிகர் சூர்​யா, தெலுங்கு இயக்​குநர் வெங்கி அட்​லூரி இயக்கும் படத்​தில் நடித்து முடித்​திருக்​கிறார். இதையடுத்து கார்த்​தி​யும் தெலுங்கு இயக்​குநர்​கள் படங்களில் கவனம் செலுத்த இருக்​கிறார் என்​கிறார்​கள்.

நேரடி தெலுங்கு படத்​தில் கார்த்தி?
சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தத் தடை? - மத்திய அரசு பரிசீலனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in