சாலை விபத்தில் கன்னட நடிகர் ஹரீஷ் உயிரிழப்பு

சாலை விபத்தில் கன்னட நடிகர் ஹரீஷ் உயிரிழப்பு
Updated on
1 min read

கன்னட சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ஹரீஷ் (40) சாலை விபத்தில் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால்நகரில் இருந்து தனது சொந்த ஊரான ஹோசகோட்டைக்கு நடிகர் ஹரீஷ், காரில் சென்று கொண்டிருந்தார்.

அனேகடு வனப்பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. இதில் நடிகர் ஹரீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஷால்நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் நடிகரான ஹரீஷின் மரணம் கன்னடத் திரைத்துறை யினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்தில் கன்னட நடிகர் ஹரீஷ் உயிரிழப்பு
மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in