

ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியான இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் டி-சீரிஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் தோற்றம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இதன் பூஜை, கர்நாடக மாநிலம் ஹம்பி அருகில் உள்ள அனுமனஹள்ளியின் அஞ்சனாத்ரி மலையில் பிப்.22-ம் தேதி நடக்கிறது. படப்பிடிப்பு மார்ச் இறுதி அல்லது ஏப்ரலில் தொடங்க இருக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ராணா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய தோற்றம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.