ரூ.100 கோடி வசூலை கடந்த ‘இருமுடி’

ரூ.100 கோடி வசூலை கடந்த ‘இருமுடி’
Updated on
1 min read

ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘இருமுடி’. ரவிதேஜா, ப்ரியா பவானி சங்கர், சாய் குமார், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார். இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி தெலுங்கிலும், ‘இருமுடி கட்டு’ என்ற பெயரில் தமிழிலும் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ரவிதேஜாவின் சமீபத்திய படங்கள் யாவுமே பெரும் தோல்வியை தழுவி வந்த நிலையில், ‘இருமுடி’ மாபெரும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்துக்கு ரவிதேஜா சம்பளம் பெறாமல் பட விநியோகத்தில் நிசாம் உரிமையினை பெற்றிருந்தார். அந்த ஏரியாவில் இருந்து மட்டுமே பங்குத் தொகையாக ரூ.30 கோடிக்கும் மேல் ரவிதேஜாவுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.100 கோடி வசூலை கடந்த ‘இருமுடி’
பிருத்விராஜ் - கரீனா கபூரின் ‘டாய்ரா’ முதல் தோற்றம் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in