

மாயஜால ஃபேன்டஸி சாகச கதையில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள திரைப்படம், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. இதை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். கால பைரவா இசையமைத்துள்ளார். ஷோயிங் பிசினஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி வழங்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அக்.2-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. “இப்படத்தின் ஃபேன்டஸி கதைக்களமும், அதன் தனித்துவமான பின்னணியும், படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும்” என படக்குழு தெரிவித்துள்ளது.