

ஸ்வாசிகாவுடன் நடிக்கும்போது அவரது சொந்த தம்பி போல உணர்ந்ததாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
நடிகர் துலகர் சலமான் நடிப்பில் வெளிவர இருக்கும் தெலுங்கு படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இந்தப் படத்தில் அவருடன் சாத்விகா, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வாரம் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய படத்தின் நாயகன் துல்கர் சல்மான், நடிகை ஸ்வாசிகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்.
அவர் கூறுகையில், “இந்தப் படத்தில் ஸ்வாசிகா எனக்கு அக்காவாக நடித்துள்ளார். ஆனால் உண்மையில் அவர் என்னை விட இளையவர். ஆனாலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அவருக்கு நன்றி.
படப்பிடிப்பில் உங்களுடன் நடித்த ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களுடைய நடிப்பு இயல்பாக இருக்கிறது. நான், உங்களின் சொந்த தம்பி போலவே உணர்ந்தேன். நீங்கள் ஒரு சிறந்த நடிகை” என்று துல்கர் பேசினார்.
ட்ரெய்லர் எப்படி?
‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 16 அன்று வெளியானது. இதில் கிருஷ்ணா என்கிற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும், நாயகி சாத்விகா கல்பனா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஒரு குக் கிராமத்தில் வசிக்கும் கல்பனாவுக்கு விண்வெளி வீராங்கணையாக வேண்டும் என்பது கனவு. சமூகத்தின் தடைகளைத் தாண்டி கல்பனா தன் கனவை எட்டிப் பிடிக்க போராடுவதையும், அதற்கு கிருஷ்ணா துணை நிற்பத்தையும், காதல், உணர்வுப்பூர்வமான காட்சிகளாக காட்டி எதிர்பார்ப்பைத் துண்டுகிறது ட்ரெயிலர்.
சந்தீப் கன்னவ், ரம்யா கன்னவ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.