

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ அம் கேம்’ படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். இதில் ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், கதிர், கயாது லோஹர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.
துல்கரின் 40-வது படமான இதை ‘தனது வேஃபரர் பிலிம்ஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டக் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரசிகர்களைச் சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். அவர் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.