ரூ.500 கோடி பட்ஜெட்டில் 2 பாகமாக உருவாகிறது ரிஷப் ஷெட்​டியின் ‘சத்ரபதி சிவாஜி’

ரூ.500 கோடி பட்ஜெட்டில் 2 பாகமாக உருவாகிறது ரிஷப் ஷெட்​டியின் ‘சத்ரபதி சிவாஜி’
Updated on
1 min read

மராட்​டிய பேரரசை நிறு​விய மன்​னர் சத்​ரபதி சிவாஜி​யின் வாழ்க்கை வரலாற்​றைத் தழுவி ‘சத்​ரபதி சிவாஜி மகா​ராஜ்’ என்ற தலைப்​பில் திரைப்​படம் உரு​வாகிறது.

இதில் ‘காந்​தா​ரா’ ரிஷப் ஷெட்​டி, சிவாஜி​யாக நடிக்​கிறார். படத்தை சந்​தீப் சிங் இயக்​கு​கிறார். தமிழ், இந்​தி, தெலுங்கு உட்பட 5 மொழிகளில் உரு​வாகும் இந்​தப் படத்​தின் முதல் தோற்​றத்​தை, எக்ஸ் தளத்​தில் ரிஷப் ஷெட்டி வெளி​யிட்​டிருந்​தார். அது வரவேற்பைப் பெற்​றிருந்​தது.

சத்​ரபதி சிவாஜி​யின் வாழ்க்​கை, சாதனை​கள் மற்​றும் பாரம்​பரியத்தை மைய​மாகக் கொண்டு இப்​படம் உரு​வாகிறது. ரூ.500 கோடி பட்​ஜெட்​டில் உரு​வாக இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இந்நிலை​யில் இப்​படம் 2 பாக​மாக உரு​வாக இருப்​ப​தாகச் செய்திகள் வெளி​யாகி​யுள்​ளன. முதல் பாகம் 2028-ம் ஆண்​டும், 2ம் பாகம் 2029ம் ஆண்டு வெளி​யாக இருக்​கிறது. மகா​ராஷ்டி​ரா​வின் பல்வேறு பகு​தி​களில் படப்​பிடிப்பு நடை​பெற உள்​ளது.

தற்​போது ‘ஜெய் ஹனு​மான்’ படத்​தில் நடித்து வரும் ரிஷப் ஷெட்​டி, அந்​தப் படத்​தின் பணி​களை முடித்த பிறகு இந்த வரலாற்​றுப் படத்தின் படப்​பிடிப்​பில் இணைய இருக்​கிறார். பிரபல பின்​னணி பாடகி ஆஷா போன்​ஸ்​லே​வின் பேத்தி ஜனாய் போன்​ஸ்லே இந்தப் படத்​தில் நடிக்க இருப்​ப​தாக ஏற்​கெனவே அறிவிக்​கப் ​பட்டது. சத்​ரபதி சிவாஜி​யின் மனை​வி​யான ராணி சாய் போன்​ஸ்​லே​வாக அவர் நடிக்க இருக்​கிறார்.

ரூ.500 கோடி பட்ஜெட்டில் 2 பாகமாக உருவாகிறது ரிஷப் ஷெட்​டியின் ‘சத்ரபதி சிவாஜி’
Natchathiram Nagargiradhu: அடக்குமுறைகளை சுட்டெரிக்கும் சூரியன் ‘ரெனே’ | திரை தேவதைகள் 22

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in