

பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ரொமான்டிக் ஹாரர் காமெடி படம், ‘த ராஜா சாப்’. மாருதி இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜன.9-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் அள்ளி வருகிறது.
முதல் நாளில் ரூ.54 கோடி வசூலித்த இப்படம், 2 நாட்களில் ரூ.108 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் தனது சம்பளத்தை பிரபாஸ் குறைத்துக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக ரூ.150 கோடி சம்பளம் வாங்கும் பிரபாஸ் இப்படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகம் செலவானதால் ரூ.100 கோடி மட்டுமே சம்பளம் பெற்றுக் கொண்டதாகக் கூறுகின்றனர். இப்படத்துக்காக மாளவிகா மோகனன் ரூ.2 கோடியும், சஞ்சய் தத் ரூ.5 முதல் 6 கோடியும் ஊதியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.