‘தீபிகா படுகோனின் அர்ப்பணிப்பு அபாரம்!’ - ‘ராக்கா’ படக்குழு வியப்பு

‘தீபிகா படுகோனின்  அர்ப்பணிப்பு அபாரம்!’ - ‘ராக்கா’ படக்குழு வியப்பு
Updated on
1 min read

இரண்டு மாதங்களில் தனது இரண்டாவது குழந்தைக்கு தாயாகவிருக்கும் நிலையில், ‘ராக்கா’ படபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தீபிகா படுகோனை படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் ‘ராக்கா’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், தனது பிரசவத்துக்கு முன்பாக படத்தில் தனது காட்சிகளை முடித்துக் கொடுத்து விடுவதில் தீவரமாக இருக்கிறார்.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், ‘வெகு சீக்கிரமாக குழந்தை பிறக்கவிருக்கும் சூழலில், எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தபோதிலும், தீபிகா படுகோன் தொடர்ந்து ‘ராக்கா’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். செப்டம்பர் மாதம் தனது பிரசவத்துக்கு முன்பு ‘ராக்கா’ படத்தில் தனது பகுதியை நிறைவு செய்து கொடுத்து விடுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் படப்பிடிப்பு தளத்திலேயே தங்கி, தேவைப்பட்டால் இரவு வரையிலும் பணியாற்றுகிறார். அவரின் இந்த அர்ப்பணிப்பு எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது’ என்று தெரிவித்தனர்.   

‘தீபிகா படுகோனின்  அர்ப்பணிப்பு அபாரம்!’ - ‘ராக்கா’ படக்குழு வியப்பு
அஜித்தின் ‘டேர் டெவில்’ எப்படி இருக்கும்? - ஆதிக் அப்டேட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in